
சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஒலை சரவணனை மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது வெட்டிக் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று மாலை தனது மனைவி ரெபேக்காவுடன் காய்கறி மார்கெட்டிற்கு சென்று கொண்டிருந்த போது பாரதிதாசன் சாலை அருகே பின்தொடர்ந்து பைக்கில் வந்த இருவர் ரவுடி ஓலை சரவணனை வெட்டி படுகொலை செய்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்றனர்.
திருவான்மியூர் திருவீதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த பெயிண்டர் கதிர்வேல் தம்பி சுரேஷை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்றுவிட்டு 3 மாதங்களுக்கு முன்னர் வெளியே வந்த இவர் மீது 1 கொலை வழக்கு, ஒரு கொலை முயற்சி வழக்கு மற்றும் இவர் குற்றச்சாறித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரியவந்தது.
ரவுடி ஓலை சரவணனின் உடலை கைபற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் பழிக்கு பழியாக கொலை நடந்துள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.