உருளைக்கிழங்கு பொரியலை கொடுக்க சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எதிர்வீட்டு முதியவர் கைது....

எதிர்வீட்டு சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவரை போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உருளைக்கிழங்கு பொரியலை கொடுக்க சென்ற சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எதிர்வீட்டு முதியவர் கைது....

சேலம் சிவதாபுரத்தைச் சேர்ந்த 65வயது முதியவர் பழனி கூலிதொழில் செய்து வரும் இவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பழனியின் எதிர் வீட்டில் வசிக்கும் குடும்பத்தினர், வீட்டில் ஏதாவது உணவுப்பண்டங்களை சமைத்தால் வயதானவர் என்பதால் பழனிக்கும் கொண்டுவந்து கொடுத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தான்  சில நாட்களுக்கு முன்பு எதிர்வீட்டினர், உருளைக்கிழங்கு பொரியல் செய்து அதனை தங்களுடைய 8 வயது மகளிடம் கொடுத்து, முதியவரிடம் கொடுத்துவிட்டு வருமாறு அனுப்பி வைத்துள்ளனர். எதிர்வீட்டுக்குச் சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

சிறுமியைத் தேடி அங்கு பெற்றோர் வந்தபோது, அவள் அழுதுகொண்டே பெற்றோரை கட்டியணைத்துக்கொண்டாள். அவளிடம் விசாரித்தபோது, முதியவர் பழனி அந்தச் சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியது தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சேலம் நகர அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் முதியவர் பழனியை போக்சோ சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.