முன்விரோதம் காரணமாக முதியவர் சரமாரியாக வெட்டி படுகொலை…  

குளித்தலை அருகே கருப்பத்தூரில் கோபால் என்பவரை மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

முன்விரோதம் காரணமாக முதியவர் சரமாரியாக வெட்டி படுகொலை…   

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே கருப்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் கோபால் (52).  இவர் நேற்று அதிகாலை தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்று உள்ளார்.  அப்போது பம்புசெட் மோட்டார் அருகே மறைவில் மறைந்திருந்த மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டி உள்ளனர். 

இதில் தலை, கழுத்து மற்றும் கை பகுதிகளில் பலத்த வெட்டுக்காயங்களுடன் கீழே விழுந்த  கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து கொலை குற்றவாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.  

இதுகுறித்து தகவலறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட கோபால் மீது பல கொலை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. 

எனவே அவர் பழிக்கு பழி வாங்கும் நோக்கில் கொலை செய்யபட்டாரா அல்லது வேறு ஏதேனும் முன்விரோத பிரச்சினை காரணமாக அவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டரா என லாலாபேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.