நாடோடிகள் படத்தில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் சாந்தினி. இவர் சமீபத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த ஒரு புகார் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திவந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்வதாக் கூறி உடல் உறவு வைத்து கொண்டதாகவும் மேலும் 5 வருடங்கள் கணவன் மனைவி போல சேர்ந்து சென்னையில் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாகவும், இதனால் 3 முறை , கருகலைப்பு செய்தாகவும் குற்றம்சாட்டி இருந்தார். தற்போது தன்னை திருமணம் செய்ய மறுத்து, அவர் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.