கணவரின் தம்பியுடன் தகாத உறவு : மச்சினனுக்கு திருமணம் முடிவானதால் தற்கொலை செய்த அண்ணி!!

கணவரின் தம்பியுடன் கள்ள உறவில் இருந்த அண்ணி, அவருக்கு திருமணம் முடிவானதால் தற்கொலை செய்து கொண்டார்.
கணவரின் தம்பியுடன் தகாத உறவு : மச்சினனுக்கு திருமணம் முடிவானதால் தற்கொலை செய்த அண்ணி!!
Published on
Updated on
1 min read

சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு. இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். பிரபு கடந்த 2017ஆம் ஆண்டு வேலைக்காக வெளிநாட்டுக்கு சென்றுவிட்டார். அந்த சமயத்தில் பிரபுவின் உடன் பிறந்தவவர்கள் ஜெயராமன், மதன் மற்றும் விஜய் ஆகியோர் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்திருக்கின்றனர்.

அப்போது விஜய்க்கும், மஞ்சுவுக்கும் தகாத உறவு ஏற்பட்டு, அவர்கள் இருவரும் உல்லாசமாக இருக்க அடிக்கடி ஏற்காடு சென்று வருவது வாடிக்கையாக் வைத்திருந்தனர். இந்நிலையில் கொரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து திரும்பிய பிரபு தனது மனைவியுடன் கச்சராபாளையம் என்ற பகுதியில் தனிக்குடித்தனம் வைத்து, விவசாயம் செய்து வருகிறார். 

இதற்கிடையே விஜய்க்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. இந்தச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ந்து போன மஞ்சு, விஜயை அழைத்துக் கொண்டு ஏற்காடு வந்து விடுதியில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது  விஜய் மது அருந்தியுள்ளார். தனக்கு வரும் 23ஆம் தேதி திருமணம் நடக்கப் போவதாகவும், அதற்கு பின்னர் தங்களது உறவை தொடர முடியாது எனவும் மஞ்சுவிடம் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் மது போதையிலேயே தூங்கிவிட்டனர்.

 திடீரென அதிகாலை மூன்று மணியளவில் கண்விழித்த விஜய், அருகில் மஞ்சு இல்லாததைக் கண்டு அதிர்ந்து போய், கழிவறையில் நீர்விழும் சத்தம்த கேட்டு, மஞ்சு கழிவறைக்கு சென்று இருக்கலாம் எண்ணியிருக்கிறார். வெகு நேரமாகியும் மஞ்சு வெளியே வராததால்  கழிவறையின் கதவை உடைத்து பார்க்கையில் மஞ்சு நிர்வாணமாக தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். 

இதை தொடர்ந்து விஜய் மஞ்சுவை தூக்கிவந்து படுக்கையில் கிடத்தி துணிகளை போட்டுவிட்டு தண்ணீர் தெளித்தும் எழுந்திருக்கவே இல்லை எனக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஏற்காடு காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏற்காடு இன்ஸ்பெக்டர் ரஜினி சப்-இன்ஸ்பெக்டர்கள் சபாபதி மற்றும் பிரபு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com