காரியம் முடிந்ததும் கழற்றி விட்ட கள்ளக்காதலன்... விரக்தியில் நடுரோட்டில் தற்கொலை செய்த பெண்...

திருப்பூரில் குடியிருப்பு பகுதியில் பட்டப்பகலில் பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரியம் முடிந்ததும் கழற்றி விட்ட கள்ளக்காதலன்... விரக்தியில் நடுரோட்டில் தற்கொலை செய்த பெண்...
Published on
Updated on
1 min read

திருநெல்வேலியை சேர்ந்தவர் தெய்வானை. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர் திருப்பூருக்கு வந்து  கடந்த 15 ஆண்டுகளாக தந்து கே.வி.ஆர் நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். அருகில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். பணியின்போது உடன் பணிபுரிந்த நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுவே கள்ளக்காதலாக மாறியுள்ளது.

தெய்வானை தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த நபரை வற்புறுத்தி வந்துள்ளார். அந்த நபர் ஏற்கனவே திருமணமானவர் என்பதால் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் அந்த நபருடன் தன்னை சேர்த்து வைக்க கோரி அவர் மீது திருப்பூர் தெற்கு மகளிர் காவல் நிலையத்தில் தெய்வானை கடந்த சில மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தி சமாதானம் பேசி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. எனினும் தெய்வானை அந்த நபரை தன்னுடன் சேர்த்து வைக்ககோரி தொடர்ந்து கேட்டு வந்த நிலையில், எந்த பலனும் இல்லாததால் விரக்தியடைந்து தெய்வானை நேற்று கே.வி.பி நகர் பகுதியில் வீதியில் நடு ரோட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து பற்ற வைத்துக்கொண்டு தற்கொலை செய்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com