பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் திருச்சியில் கைது ....போலீஸ் விசாரணை

சென்னை பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் திருச்சியில் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் திருச்சியில்  கைது ....போலீஸ் விசாரணை

பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரன் தொழில் அதிபர்களை மிரட்டி கொலை கொள்ளை முயற்சி போன்ற பெரும் குற்றங்களை செய்து வந்தார். இவர் மீது சென்னை அடுத்த எண்ணூர், செங்குன்றம், மணலி, திருவெற்றியூர், புழல் ஆகிய சுற்றுவட்டார பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 40-க்கு மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.

குற்ற வழக்குகளில் தொடர்புடைய தனசேகரை, போலீசார் தனிப்படை அமைத்து  தேடி வந்தனர்.   இதற்கிடையில் ரவுடி தனசேகர் திருச்சி அருகே பதுங்கி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து அங்கு சென்ற போலீசார், திருச்சி திருவெறும்பூர் அடுத்த கோகுல் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த தனசேகரனை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவருடன் அவருடைய கூட்டாளிகளான சசிகுமார் , மதிவாணன் ,ஆகியோரையும் கைது செய்த போலீசார், மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.