பிரபல ரவுடி வெட்டி கொலை..! பரபரப்பு சம்பவம்..!

பிரபல ரவுடி வெட்டி கொலை..! பரபரப்பு சம்பவம்..!

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் எம்.எஸ். முத்து நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ். இவர் நேற்று மாலை புளியந்தோப்பு தாஸ் நகர் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அஜித் என்கிற சசிகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் அவரிடம் தாங்கள் பெரிய ரவுடிகள் என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆகாஷின் இரு சக்கர வாகனத்தை சோதனை செய்து அதில் மதுபானம் உள்ளதா என கேட்டுள்ளனர். அவர் இல்லை என்று கூறியதும் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆகாஷ் வீட்டிற்கு வந்து நடந்த சம்பவத்தை தனது அண்ணன் அஜித்திடம் கூறி அஜித் மற்றும் ஆகாஷ் இருவரும் சேர்ந்து மீண்டும் சம்பவ இடத்திற்கு சென்று ஏன் எனது தம்பியை அடித்தீர்கள் என அஜித் கேட்டுள்ளார். மது போதையில் இருந்த சசிகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் சேர்ந்து அஜித்தை தாக்கியுள்ளனர். இதில் அஜித்துக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த புளியந்தோப்பு கன்னிகாபுரம் புதிய திருவிக நகர் பகுதியைச் சேர்ந்த மனோ 27 என்ற நபர் என்ன நடந்தது என்று அஜித்திடம் கேட்டுள்ளார் அஜித் மற்றும் மனோ ஆகிய இருவரும் உறவினர்கள் இதனால் நியாயம் கேட்க மனோ மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகிய இருவரும் நேற்று இரவு 11 மணி அளவில் புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 5 வது தெரு பகுதிக்கு சென்று அங்கிருந்த சசிகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகிய இருவரும் சேர்ந்து அஜித்தை தாக்கியுள்ளனர் இதில் அஜித்துக்கு ரத்தக்காயம் ஏற்பட்டுள்ளது. அண்ணன் தம்பி இருவரும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது அஜித்தின் உறவினர் மனோ மற்றும் அவரது மனைவி சுப்புலட்சுமி ஆகிய இருவரும் நேற்று இரவு 11 மணி அளவில் புளியந்தோப்பு கன்னிகாபுரம் தாஸ் நகர் 5 வது தெரு பகுதிக்கு சென்று அங்கிருந்த சசிகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோரிடம் நியாயம் கேட்டுள்ளனர். அப்போது இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சசிகுமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனோவை சரமாரியாக தலை மற்றும் முகத்தில் வெட்டினர். இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மனோ சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி தடுக்க வந்துள்ளார். சசிகுமார் தான் வைத்திருந்த கத்தியால் சுப்புலட்சுமியின் தலையில் ஓங்கி வெட்டினார்.

அவருக்கும் தலையில் படுத்த காயம் ஏற்பட்டது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மனோவின் உறவினர் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனை அழைத்து சென்றார். அங்கு மனோவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மனோவின் மனைவி சுப்புலட்சுமிக்கு தலை மற்றும் கையில் 20 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்திற்கு சென்ற புளியந்தோப்பு போலீசார், இது குறித்து விசாரணை நடத்தியதில்  உயிரிழந்த மனோ மீது புளியந்தோப்பு பேசன் பிரிட்ஜ், ஓட்டேரி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை முயற்சி வழிப்பறி அடிதடி என 40 வழக்குகள் உள்ளது தெரியவந்தது.  மனோவை வெட்டிய சசிகுமார் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் பிரபல ரவுடி கொருக்குப்பேட்டை மாரியின் தம்பிகள் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து புளியந்தோப்பு போலீசார்  வழக்கு பதிவு செய்து கொருக்குப்பேட்டை மாரியின் இரண்டு மனைவிகள் மற்றும் புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த வெற்றி ஆகிய மூன்று பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சசிகுமார், திருநாவுக்கரசு, அப்பு என்கிற அஜய், தில்லை ராஜ், அருண் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர். 


இதையும் படிக்க : இந்தியாவிலிருந்து முதல் முறையாக ஜப்பானில்.....