மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை...

நடிகை மீரா மிதுனின் யூ-டியூப் பக்கத்தை முடக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் யூ-டியூப் நிர்வாகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளனர்.

மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க  மத்திய குற்றப்பிரிவு போலீசார் பரிந்துரை...

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசி நடிகை மீரா மிதுன் தனது யூ-டியூப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தாழ்த்தப்பட்டோர் பற்றி அவதூறு பரப்பும் வகையில் வீடியோ அமைந்திருப்பதாகக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச் செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுன் மீது பட்டியலினத்தோர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து கேரளாவில் பதுங்கி இருந்த நடிகை மீரா மிதுனை கடந்த 14 ஆம் தேதி கைது செய்தனர். மேலும் அவர் வீடியோ வெளியிடக் காரணமாக இருந்த அவரது ஆண் நண்பரான அபிஷேக்கையும்  கைது செய்து நீதிமன்ற உத்தவுப்படி சிறையில் அடைத்தனர்.  

மேலும், கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காததால் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.  இந்நிலையில் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசி வீடியோ வெகியிட்ட நடிகை மீரா மிதுனின் யூ-டியூப் பக்கத்தை முடக்க வேண்டும் எனக்கோரி பரிந்துரை கடிதத்தை யூ-டியூப் நிர்வாகத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுப்பியுள்ளனர். அவதூறாக பேசிய வீடியோவை மீரா மிதுன் தனது வலைதள பக்கத்திலிருந்து நீக்கி இருந்தாலும், ஜாமீனில் வெளிவந்தால அவர் மீண்டும் இதுபோன்ற வீடியோக்கள் வெளியிட வாய்ப்புள்ளதால் முடக்க பரிந்துரை கடிதம் எழுதியிருப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.