கிரிக்கெட் பயிற்சியின்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இயக்குநர் ஷங்கரின் மருமகன் உள்ளிட்ட 5 பேர் போக்சோவில் கைது...

புதுச்சேரியில் கிரிக்கெட் பயிற்சியின் போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிரிக்கெட் வீரர் மற்றும் இயக்குனர் சங்கரின் மருமகன் ரோஹிட் உள்ளிட்ட 5 பேர் மீது போஸ்கோ சட்டதின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிரிக்கெட் பயிற்சியின்போது சிறுமிக்கு பாலியல் தொல்லை: இயக்குநர் ஷங்கரின் மருமகன் உள்ளிட்ட 5 பேர்  போக்சோவில் கைது...

புதுச்சேரி முத்திரைப்பாளையம் இளங்கோ அடிகள் பள்ளி மைதானத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. அப்போது பயிற்சியில் ஈடுபட்ட 17 வயது மாணவியிடம் கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து அச்சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பயிற்சி அளிப்பவரை அனுசரித்து செல்லுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் சிறுமியின் புகாரை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் அச்சிறுமி புதுச்சேரி குழந்தைகள் நல குழுவிடம் புகார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமிக்கு பயிற்சியளித்த கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன், மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், அப்போதைய கிரிக்கெட் கிளப் தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், திரைப்பட இயக்குநர் ஷங்கரின் மருமகன் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது  போக்சோ பிரிவின் கீழ் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து தலைமறைவாக உள்ள 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.