கள்ளக்காதலியின் மகள் குளிக்கும் காட்சிகளை வீடியோ எடுத்த ஃபுட்பால் கோச்...

தேனியில் பிரபலமான ஃபுட்பால் கோச் ஒருவர் பயிற்சி பெறும் வீராங்கனைகளுக்கு ஆபாச வீடியோக்களை காட்டியதாக புகார் எழுந்துள்ளது.

கள்ளக்காதலியின் மகள் குளிக்கும் காட்சிகளை வீடியோ எடுத்த ஃபுட்பால் கோச்...

தேனி பகுதியில் கால்பந்து விளையாடும் வீரர், வீராங்கனைகளிடையே பிரபலமானவர் அருள்குமரன். இவர் தேனி மாவட்ட கால்பந்து சம்மேளனத்தின் பொருளாளராகவும் உள்ளார். தேனி பகுதியில் நடைபெறும் பல்வேறு கால்பந்து முகாமில் வீரர், வீராங்கனைகளுக்கு பயிற்சிகளையும் வழங்கியுள்ளார். அப்போது வீடியோ எடுக்கும் பழக்கத்தை வைத்திருந்த அவர் பயிற்சியை மட்டும் எடுக்கவில்லை. அவர்களின் அந்தரங்க பாகங்களையும் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து மிரட்டியுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

அருள்குமரனுக்கு தன்னைவிட வயதில் மூத்த பெண்ணான சுமதி என்பவருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இருவரும் அவ்வப்போது உல்லாசமாக இருந்துள்ளனர். இந்த நிலையில், சுமதி தன் மகளான 28 வயது பெண்ணுடன் அருள்குமரன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது சுமதியின் மகள் பாத்ரூமில் நிர்வாணமாக குளிப்பதை வீடியோ எடுத்து, அவரை மிரட்டி அருள்குமரன் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனிடையே, அருள்குமரனிடம் பயிற்சி பெற்ற மாணவிகளிடம் அவர் எதாவது சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அருள்குமரனின் செல்போனையும் மீட்ட போலீசார், அதில் வேறு எதாவது பெண்களின் அந்தரங்க படங்கள் உள்ளதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.