ஐஎப்எஸ் வழக்கு: பல நூறு கோடி வசூலித்து கொடுத்த முன்னாள் காவல் அதிகாரி கைது!

ஐஎப்எஸ் வழக்கு: பல நூறு கோடி வசூலித்து கொடுத்த முன்னாள் காவல் அதிகாரி கைது!
Published on
Updated on
1 min read

சென்னை: சென்னையில் உள்ள ஐஎப்எஸ் நிறுவனத்திற்கு பல நூறு கோடி தொகையை வசூலித்து கொடுத்ததாக, முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

வேலூரை தலைமையாக கொண்ட ஐஎப்எஸ்  நிறுவனம், தமிழ் நாட்டில் பல இடங்களில் அதன் கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம், மக்களிடம் அதிகம் வட்டி தருவதாக கூறி மக்களிடம் பல ஆயிரம் கோடிகள் வசூலித்தது. இது போலவே, கிண்டியில் உள்ள கிளையிலும் நடந்துள்ளது. மக்கள்  செய்யும் பணத்திற்கு 10 சதவீதம் வட்டி தருவதாக கூறி, 84 ஆயிரம் பேரிடம் ரூ 5 ஆயிரத்து 900 கோடி வசூலித்துள்ளது.

ஆரம்பத்தில் மக்களிடம் வட்டி தொகையை சரியாக வழங்கி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக மக்களிடம் வட்டி மற்றும் அசல் தொகையினை மக்களிடம் வழங்குவதை நிறுத்தியுள்ளது. இதில் சந்தேகமடைந்த மக்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பெரிய அளவில் நடந்துள்ள பொருளாதார மோசடி என்பதால் அந்த வழக்கு, மாநில பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த காவலர்கள், ஐஎப்எஸ்  நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்கள் லட்சுமி நாராயணன் , வேத நாராயணன், மோகன் பாபு, ஜனார்தனன் உட்பட 10 இயக்குனர்கள் உட்பட மொத்தம் 21 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். அதில் 6 முக்கிய ஏஜெண்டுகள் சிக்கிய நிலையில், 5 பங்குதாரர்கள் தப்பியுள்ளார். பின்னர், ரூ 1.14 கோடி ரொக்கம், 791 வாங்கி கணக்குகளில் இருந்த ரூ 121 கோடி பணமும் ஒதுக்கப்பட்டு, ரூ 39 கோடி மதிப்புடைய அசையா சொத்துக்கள் மற்றும் வெளிநாட்டு பணபரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

வெளி நாட்டுக்கு தப்பியோடிய 5 பங்குதாரர்களையும் பிடிக்க ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், 2 ஆயிரம் நபர்களிடம் இருந்து 550 கோடி வசூல் செய்த காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகவர் கேமந்திர குமாரை காவல்துறை கைது செய்துள்ளனர். அவர் முன்னாள் காவல் துறை அதிகாரி எனவும் தெரிகிறது. அவரிடம் இருந்த சொத்து ஆவணங்களையும் மீட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com