போலி ரூபாய் நோட்டுகளை மாற்ற முயன்ற கும்பல் கைது - ரூ. 4.66 கோடி போலி ரூபாய் நோட்டுகள் பறிமுதல்  

கிருஷ்ணகிரியில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக போலி ரூபாய்  நோட்டுகளை  மாற்ற முயன்ற கும்பலை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி நகர் பகுதியில் ஒரு கும்பல் 50 லட்சம் பணம் கொடுத்தால் 2 கோடி தருவதாக கிருஷ்ணகிரி நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று இரவு ராயகோட்டை மேம்பாலம் அருகில் காரில் வந்த ஒரு கும்பலை போலிசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் போலி ரூபாய் நோட்டுகளை பிரிண்ட் எடுத்து மாற்ற முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து 10 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 4 புள்ளி 66 கோடி மதிப்பிலான போலி ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில் இவர்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடக, தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் இதே போல் பல இடங்களில் போலி பண பரிமாற்றம் செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.