பெட்ரோல் பங்கில் பயங்கர ஆயுதங்களைக் காட்டி கொள்ளையடித்த கும்பல் சிக்கியது!

ராமநாதபுரம் அருகே, பெட்ரோல் பங்கில், கொள்ளையில் ஈடுபட்டவர்களை, ஒருவார காலத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.

பெட்ரோல் பங்கில் பயங்கர ஆயுதங்களைக் காட்டி கொள்ளையடித்த கும்பல் சிக்கியது!

ராமநாதபுரம் அருகே, பெட்ரோல் பங்கில், கொள்ளையில் ஈடுபட்டவர்களை, ஒருவார காலத்திற்குள் போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம்  மாவட்டம் கீழக்கரையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு, கடந்த வாரம் முக மூடி அணிந்து வந்த மர்மக்கும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களைக் காட்டி மிரட்டி, கல்லாவில் இருந்த ஒரு லட்சத்து, 80 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை தேடி வந்த தனிப்படை போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட கீழக்கரையை சேர்ந்த பாலமுருகன், நிர்மல் ராஜ், மற்றும் ராஜேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முகமூடிக் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டதால்,  நிம்மதி அடைந்த பொதுமக்கள், ஒருவார காலத்திற்குள் கொள்ளையர்களை கைது செய்து போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.