ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் பெண்... கதறி அழும் வீடியோ வைரல்...

ஓமன் நாட்டில் வேலைக்கு சென்ற இடத்தில் கொடுமை படுத்துவதாக கூறி பெண் ஒருவர் கதறி அழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.
ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் பெண்... கதறி அழும் வீடியோ வைரல்...
Published on
Updated on
1 min read

ஓமன் நாட்டில் வேலைக்காக சென்ற பெண் அங்கு தம்மை 16மணி நேரம் வேலை வாங்குவதாக கூறி கண்ணீர் மல்க அழுது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடசென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த பத்மா என்ற பெண்  தனது கடன் சுமை காரணமாக கடனை கட்டமுடியாமல் கடனுக்காக வாங்கிய வட்டியையும் கட்ட முடியாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் தெரிந்தவர்கள் மூலமாக ஓமன் நாட்டில் வீட்டை பராமரிக்கும் வேலை இருப்பதாக தெரியவரவே அங்கு வேலைக்கு கடந்த ஆண்டு சென்றுள்ளார். வீட்டு பராமரிப்பிற்கு என சென்ற இடத்தில் சுமார் 15பேர் அளவில் 4மாடிகள் கொண்ட வீட்டில் வேலைக்கு சென்றுள்ளார்.

அங்கு அந்த 15பேர் சாப்பிட உணவும் சாப்பிட்ட பிறகு அந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதும் மட்டுமல்லாது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, துணிகளை துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என ஒரு நிமிடம் கூட தம்மை விடுவதீல்லை எனவும் காலை 5மணி அளவில் வேலை தொடங்கினால் நள்ளிரவு 1மணி வரை வேலை வாங்குவதாகவும் கூறுகிறார்.

தாய் நாட்டிற்கு திரும்ப வேண்டுமென கூறினால் இரண்டு லட்சருபாய் கொடுக்க வேண்டும் எனவும் ஒருவேளை தாம் அதற்குள் இறந்து விட்டால் தம் சடலத்தை இந்தியாவில் ஒப்படைக்க வேண்டுமென்றாலும் அதற்கும் இரண்டு லட்சருபாய் கொடுத்தால்தான் சடலத்தையும் ஒப்படைப்போம் என வீட்டின் உரிமையாளர் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இங்கு வேலைக்கு வந்து சிக்கி இருக்கும் தம்மை தமிழக முதல்வர் எப்படியாவது மீட்டு தாய் நாட்டிற்கு கொண்டுவர வேண்டுமென அயல்நாட்டு வேலையை நம்பி சென்ற பத்மா கண்ணீர் மல்க கோரிக்கை வைத்து கதறி அழுகிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com