கடையில் இருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு...மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கோவை அருகே பட்டப்பகலில் கடையில் இருந்த பெண்ணிடம் செயின் பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடையில் இருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு...மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அடுத்த கே.ஜி.கே சாலையில் மளிகை கடை நடத்தி வருபவர் செல்வகுமார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்கள் இருவரும் கடையை கவனித்து வருகின்றனர்.இந்நிலையில் இன்று மதியம் கடையில் இருந்த தனலட்சுமியிடம்,  சிகரெட் வாங்க வந்துள்ளார்.

அப்போது திடீரென  அந்த இளைஞர் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5.1/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடியதாக கூுறப்படுகிறது. நகை பறிபோதை கண்ட தனலட்சுமி கத்தி கூச்சலிட்டுள்ளார்.   அவரின்  சத்தத்தை கேட்டு அங்கு வந்த செல்வகுமார் சங்கிலியை பறித்துச்சென்ற இளைஞரை விரட்டி சென்றுள்ளார். அதற்கு அந்த மர்மநபர் மற்றொரு நபருடம் வாகனத்தில் ஏறி அங்கிருந்து தப்பி சென்றார்.

இது குறித்து உடனடியாக குனியமுத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அருகில் இருந்த கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தனர். அதில் மளிகை கடையில் இருந்து தங்க சங்கிலியை பறித்துச்செல்லும் காட்சிகளும் அதன் பின்னர் அவர்கள் குனியமுத்தூரை நோக்கி செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.

மேலும்  கே டி எம் எனப்படும் உயர் ரக பைக்கில் பதிவு எண் இல்லாமலும் தலையில் முகத்தை மறைக்கும் அளவில் குல்லாவையும் அவர்கள் அணிந்து செல்வது  பதிவாகியிருந்தது.. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் மர்ம நபர்களை  தேடி வருகின்றனர்.