திருச்சி விமான நிலையத்தில் 46.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

திருச்சி விமான நிலையத்தில் 46.35 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்..!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் ஒரு பயணியை சோதனை செய்தபோது... அவர் 826 கிராம் எடையுள்ள தங்கத்தை தான் எடுத்து வந்த மின்சாதன பொருளில் மறைத்து வைத்திருந்துள்ளார்.

அதனை கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடமிருந்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு 46,35,532 என அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கத்தை கடத்தி வந்த நபரிடம் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.