சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய பகுதிக்குட்டபட்ட கடைகளில் சிலர் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்களை விற்பணை செய்வதாக அடையாறு துணை ஆணையாளர் அவர்களின் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படையைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் செல்வகுமார், தலைமைக் காவலர் வெங்கடேசன், முதல் நிலைக் காவலர்கள் சண்முகம் மற்றும் பூர்ண குமார் ஆகியோர் மேற்கு ஜான்ஸ் ரோடு பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான சரக்கு வாகனத்தை (Tata Ace) மடக்கி சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வாகனத்தில் சுமார் 345 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.