திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் பயிற்சியாளர்: பெண்ணிடம் கெஞ்சிய ஆடியோ லீக்

தடகளபயிற்சியாளர் நாகராஜனை தொடர்ந்து, தற்போது ஜிம் பயிற்சியாளர் ஒருவரும் திருமணமான  பெண்ணிடம் அத்துமீறிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

திருமணமான பெண்ணுக்கு  பாலியல் தொல்லை கொடுத்த ஜிம் பயிற்சியாளர்: பெண்ணிடம் கெஞ்சிய ஆடியோ லீக்

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரம் அடுத்த கேம்ப் ரோட்டில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தவர் பிரேம் ஆனந்த். இவர் ஊரடங்கு காலத்திலும், தடையை மீறி, ஜிம்மை திறந்து பின்வாசல் வழியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுமதித்து பயிற்சி அளித்து வந்ததாக கூறப்படுகிறது. அண்மையில் அவரது கூடத்தில் பயிற்சி முடிந்து அனைவரும் திரும்பிய நிலையில், அங்கு பயிற்சியில் இருந்த திருமணமான பெண் ஒருவரை மட்டும் பயிற்சி இருப்பதாக கூறி அவரை வீட்டிற்கு விடாமல் பிரேம் ஆனந்த் தடுத்துள்ளார். 

ஆனால் அதன்பின் பயிற்சி அளிக்காமல், அப்பெண் தனிமையில் இருப்பதை பயன்படுத்தி பிரேம் ஆனந்த் எல்லை மீறியதாக கூறப்படுகிறது. ஒரு வழியாக பிரேமின் பாலியல் சீண்டலிலிருந்து தப்பிய அப்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார்.  

இந்த நிலையில் அப்பெண் தனது செயலை வெளியே சொல்லிவிடுவாரோ என அஞ்சிய பிரேம் ஆனந்த், அவரை  தொடர்பு கொண்டு, பயிற்சிக்கான கட்டணத் தொகையை  திரும்பத் தந்துவிடுவதாக கூறியதோடு, இதுபற்றி யாரிடமும் பேசவேண்டாம் எனவும் கெஞ்சியுள்ளார். அதுமட்டுமல்லாது பணத்தையும் வந்து வாங்கி செல்லும்படி கூறியுள்ளார். இந்த ஆடியோ உரையாடலானது தற்போது வலைதளங்களில் வைரலாகி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.