நைசாக பேச்சை போட்டு சிறுமிகளுக்கு இன்ஸ்டாகிராமில் வலைவீச்சு... நிர்வாண புகைப்படங்கள் மூலம் பணம் பார்க்க துணிந்த 19 வயது காமகொடூரன்

இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை மயக்கி நிர்வாணப் படங்களை காட்டி மிரட்டிய நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்
நைசாக பேச்சை போட்டு சிறுமிகளுக்கு இன்ஸ்டாகிராமில் வலைவீச்சு... நிர்வாண புகைப்படங்கள் மூலம் பணம் பார்க்க துணிந்த 19 வயது காமகொடூரன்
Published on
Updated on
1 min read

தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அஜய் என்பவர், பல்வேறு பெயர்களில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி,  அப்பாவி சிறுமிகளிடம் பழகி நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை பகிருமாறு பெண்களிடம் கேட்டு அவர்களை வலையில் சிக்க வைத்துள்ளார். பின்னர்  அவர்களை மிரட்டி தனது விருப்பங்களுக்கு செவிசாய்க்காவிட்டால் அவர்களின் தனிப்பட்ட படங்களை சமூக ஊடக தளங்களில் பதிவேற்றுவேன் என்று மிரட்டி வந்துள்ளான்.

 இந்த நிலையில் இது குறித்து புகார் வந்த நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஹைதராபாத் மத்திய குற்றப்பிரிவு (சிசிஎஸ்) சைபர் கிரைம் போலீசார்,  சிறுமிகளை சமூக ஊடக கணக்குகளில் அணுகி, அவர்களின் நிர்வாண செல்ஃபி வீடியோக்களைப் பகிருமாறு கேட்டு அவர்களை சிக்க வைத்தார்.

இவர் வெவ்வேறு பெயர்களில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்குகளை உருவாக்கி,  சிறுமிகளுக்கு  கோரிக்கைகளை அனுப்புவது வழக்கம். அவரது நண்பர் கோரிக்கை ஏற்கப்பட்ட பிறகு, அவர் சாதாரண  அவர்களுடன் பேசி நட்பை வளர்த்துக் கொண்டு பின்னர் அவர்  சிறுமிகளின் நிர்வாண புகைப்படத்தை வாங்கி கொண்ட பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக அஜய் வைத்துள்ளான் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அஜயை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com