தொழிலதிபர் மார்ட்டின் வீட்டில் 4ம் நாளாக ஐடி சோதனை...!

கோவை லாட்டரி விற்பனை அதிபர் மார்ட்டின் வீட்டில் 4வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் கோவையில் தொழிலதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான 70 இடங்களில் கடந்த 11ம் தேதி முதல் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். சென்னையில் போயஸ் தோட்டம், கோவையில் வெள்ளக்கிணறு, கிராஸ்கட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மார்ட்டினின் வீடு, ஹோமியோபதி கல்லூரி, அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது. 

இதையும் படிக்க : தஞ்சாவூரில் களைகட்டிய ஹேப்பி சன் ஸ்ட்ரீட் நிகழ்ச்சி...!

இதைத்தொடர்ந்து கணக்கில் காட்டப்படாத பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள மார்ட்டினின் வீட்டில் 4வது நாளாக அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.