மனைவி மீது சந்தேகம்... 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மனைவியின் நடத்தை மீதான சந்தேகத்தால் இரண்டு குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவி மீது சந்தேகம்... 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தந்தையும் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் மாவட்டம், மங்கலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே செயல்பட்டு வரும் ஓட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வந்த நிலையில், குடும்பத்துடன் அதே பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் முருகனின் மனைவி முருகேஸ்வரி தொடர்ந்து வேறொரு நபரிடம் செல்போனியில் பேசி வந்துள்ளார். இதனை முருகன் கண்டித்தும் அதனை கேட்காமல் தொடர்ந்து பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகன் இரண்டு குழந்தைகளை கொலை செய்து வீடுயோ எடுத்து அவருடைய உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.  

பின்னர் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை வலைவீசி தேடிவந்தனர். இதையடுத்து 3 பேரும் இறந்த நிலையில் அவர்களுடைய உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.