மது அருந்தி பணி செய்த சிறைச்சாலை தலைமை வார்டன் பணி இடை நீக்கம்!

Published on
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம் அரூர் கிளை சிறைச்சாலையில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு மேற்கொண்டார். 

சேலம் மத்திய சிறைச்சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள அரூர் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த கிளை சிறையில், சிறை காப்பாளர், காவலர்கள், சமையலர் என 13 பேர் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில் மது போதையில் பணியில் ஈடுபட்டதாக தலைமை வார்டன் அசோக்குமார் மீது புகார் எழுந்ததது. 

இதனையடுத்து அசோக் குமாருக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த சோதனையில் அசோக் குமார் மது அருந்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து சிறைத்துறை டிஜிபி அம்ரீஷ் புஜாரியிடம் இது குறித்த விரிவான அறிக்கை சமர்பிக்கப்பட்டது. சிறைத்துறை டிஜிபி அம்ரீஷ் புஜாரி உத்தரவின் பேரில் ஆய்வு மேற்கொண்ட சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஜி வினோத்  மது போதையில் பணி செய்த தலைமை வார்டன் அசோக்குமார் என்பவரை பணி இடை நீக்கம் செய்தார். 

மேலும், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com