பொன்முடி வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரான ஜெயகுமார்!!

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த பூத்தூறை கிராமத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் அள்ளி அரசுக்கு 28 கோடியே.36 லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2012ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி. அவரது மகன் கெளதம சிகாமணி உள்ளிட்ட 7 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் தற்போது சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. சாட்சிகள் பிறல்சாட்சியாக மாறிவதாகக் கூறி, இந்த வழக்கில் தன்னையும் இனைத்துக்கொள்ள கேட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த 9ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். 12ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணையில் ஜெயக்குமார் கோரிக்கையை ஏற்று, இன்று 25-09-23 நேரில் ஆஜராக நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். 

அதன் படி, இன்றைய வழக்கு விசாரணையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்பாக ஆஜரானர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com