லிப்ட் தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை கொள்ளை....

கடலூர் மாவட்டம் அருகே மூதாட்டியிடம் லிப்ட் தருவதாக கூறி இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் நகையை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லிப்ட் தருவதாக கூறி மூதாட்டியிடம் நகை கொள்ளை....

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனக்கோடி . மூதாட்டியான இவர் இன்று தனது மகள் ஊரான  பெரம்பலூர் மாவட்டத்திற்கு சென்றுவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளார். அப்போது செங்கமேடு கிராமம் வழியாக நடந்து வந்த மூதாட்டியிடம், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் எந்த ஊர் என விசாரித்துள்ளார்.

மூதாட்டி தனது ஊரை சொன்னதும் தானும் அவ்வழியாக தான் செல்கின்றேன், செல்லும் வழியில் உங்களை இறக்கி விட்டு செல்கின்றேன் என கூறியுள்ளார். இதனை நம்பிய மூதாட்டி  மரம் நபரின் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது மர்மநபர் மூதாட்டியிடம் இருந்த கைப்பையை தன்னிடம் தருமாறும் இறங்கும் பொழுது கொடுத்து விடுவதாகவும் கூறியுள்ளான்.

மூதாட்டியும் அவனிடம் கைப்பையை கொடுத்துள்ளார். மூதாட்டியின் சொந்த கிராமத்தின் அருகே இறக்கி விட்டு விட்டு கைபையையும் கொடுத்து விட்டு வந்த வழியே திரும்பி  உள்ளான் மர்மநபர். அதன்பின்னர் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கியதும் தான் கொண்டு வந்த கைப்பயை திறந்து பார்த்துள்ளார் மூதாட்டி.

அப்போது அதில்  வைத்திருந்த ஒன்றரை சவரன் தோடு இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் ஆவினங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்