தோஷம் கழிப்பதாக கூறி நகை அபகரிப்பு... போலி பெண் மந்திரவாதி கைது...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தோஷம் கழிப்பதாக கூறி 22 அரை பவுன் நகைகளை அபகரித்த போலி பெண் மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் மீட்கப்பட்டன.

தோஷம் கழிப்பதாக கூறி நகை அபகரிப்பு... போலி பெண் மந்திரவாதி கைது...

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வெட்டடூணிமடம் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரிராஜா இவருடைய மனைவி சுஜிதா (34) இவருக்கும் நாகர்கோவிலைச் சேர்ந்த 48 வயது பெண்ணுக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டது அப்போது சுஜிதா தன்னை ஒரு சாமியார் போல அந்த பெண்ணிடம் காட்டிக் கொண்டார். 

பின்னர் பின்னர் புதிததாக பழகிய தோழி பெண்ணுக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதாகவும் இதனால் உனது இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகாது என்று போலி பெண் மந்திரவாதி சுஜிதா கூறி உள்ளார்.இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனக்கு தோஷத்தை போக்க முடியுமா என கேட்டுள்ளார்.

அதற்காக பரிகாரமாக எதை வேண்டுமானாலும் தரத் தயார் என்று பெண் போலி மந்திரவாதி சுஜிதாவிடம் கூறியுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுஜிதா அந்தப் பெண்ணிடம் பரிகார பூஜை நடத்த வேண்டும் என கூறி அவ்வப்போது நகைகளை பெற்று கிட்டத்தட்ட22 அரை பவுன் நகைகளை பெற்றுள்ளார்.

பின்னர் பூஜை முடிந்து விட்டது என்று கூறி நகையை திருப்பிக் கொடுக்கும்போது போலி நகை கொடுத்ததாக தெரிகிறது.இதனை அடுத்து ஏமாற்றம் அடைந்த 48 வயது அந்தப் பெண் நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சுஜிதாவை கைது செய்தனர். மேலும் அவர் போலி மந்திரவாதி எனவும் பலரிடம் ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது.

இதை அடுத்து கைது செய்யப்பட்ட சுஜிதாவிடம் இருந்து 22 அரை பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.மேலும் இவர் என்னென்ன மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விசுவல். சம்பந்தப்பட்ட இடம் மற்றும் வடசேரி காவல் நிலையம் கைது செய்யப்பபட்ட போலி பெண் சாமியார். சுஜிதா புகைப்படம்.