சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் அதிரடி ரெய்டால் பரபரப்பு...!

சென்னையில் என்.ஐ.ஏ அதிகாரிகளின் அதிரடி ரெய்டால் பரபரப்பு...!

சென்னையில் 8 இடங்களில் கேரள மாநில என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்ட நிலையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரள கடற்பகுதியில் ஆயிரத்து 500 கோடி ரூபாய் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்பட்ட வழக்கில், சென்னையில் எட்டு இடங்களில் கேரள என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அந்தவகையில், பாரிமுனை ஈவினிங் பஜார், முத்தியால்பேட்டை மற்றும் மண்ணடியிலுள்ள மூன்று தனியார் விடுதிகளிலும் சோதனை நடத்தி போரூரை சேர்ந்த ஐயப்பன் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.

இதையும் படிக்க : ஆளுநருக்கு சவால் விடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...!

இதனையடுத்து 300 கிராம் தங்கம், ஆயிரம் சிங்கப்பூர் டாலர், சுமார் 82 லட்சம் ரொக்கப்பணம், 10 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஹவாலா பணப் பரிவர்த்தனையில் இலங்கை மற்றும் சென்னையை சேர்ந்த நபர்கள் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

ஏற்கனவே விழுஞ்சியம் கடற்பகுதியில் பிடிபட்ட போதை மற்றும் ஆயுத பொருட்கள் கடத்தல் வழக்கில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு கட்ட சோதனைகளை என்.ஐ.ஏ அதிகாரிகள் மேற்கொண்டு 20க்கும் மேற்பட்ட நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர். அந்தவகையில், தற்போது இந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.