கிருஷ்ணகிரி: கட்டையால் மருமகனின் மண்டையை உடைத்த மாமியார்.. பரபரப்பு சம்பவம்!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் மனைவியை தொடர்ந்து துன்புறுத்தி வந்த கணவனை பெண்ணின் உறவினர்கள் கட்டையால் அடித்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி: கட்டையால் மருமகனின் மண்டையை உடைத்த மாமியார்.. பரபரப்பு சம்பவம்!!

போச்சம்பள்ளி அடுத்த ஜிஞ்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன். பெங்களூரில் கார்பெண்டர் வேலை செய்து வரும் இவருக்கு, பிரீத்தா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கணவர் ஈஸ்வரன்  தன்னை அடிக்கடி அடிப்பதாக பிரீத்தா தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பிரீத்தாவின் தாய் கவிதா மற்றும் உறவினர் உறவினர்கள், ஈஸ்வரனை சுற்றி வளைத்து, கட்டையால் கடுமையாக தாக்கினர்.

கண்மூடித்தனமாக தாக்கியதில் ஈஸ்வரனின் மண்டை உடைந்ததாக கூறப்படுகிறது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் ஈஸ்வரன் அலறியதை அடுத்து, அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.