புழல் சிறையில் ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு!

சென்னை புழல் மத்திய தண்டனை சிறை கைதி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. 

திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு கிராமத்தைச் சேர்ந்த  பாலசுப்ரமணியம் என்பவரின் மகன் கஜா ( எ) கஜா கஜேந்திரன்  ( வயது 63 ) இவர் கடந்த 2007 ம் ஆண்டு மறைமலை நகரில் நடந்த கொலை வழக்கில்  போலீசாரால் கைது செய்யப்பட்டு  விசாரணை  முடிந்து கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி முதல் புழல் சிறையில்  ஆயுள் தண்டனை  கைதியாக  அடைக்கப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார். இந்நிலையில் மன உளைச்சல் காரணமாக இன்று அதிகாலை கழிவறையில் உள்ள ஜன்னலில் துண்டால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாக கூறப்படுகிறது. 

தகவல் அறிந்த புழல் சிறை காவலர்கள் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு  விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி புழல் காவல் நிலைய ஆய்வாளர் மல்லிகா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க: பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானது...!