பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் அடித்து கொல்லப்பட்ட கொடூரம்

ராஜஸ்தானில், பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் அடித்து கொல்லப்பட்ட கொடூரம்
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில், பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்த நபர் மர்ம நபர்களால் சரமாரியாக தாக்கி படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.

ஜெய்ப்பூர் மாவட்டம், பிரேம்புரா பகுதியில் வசிக்கும் ஜக்தீஷ் மெக்வால் என்பவர், ஹனுமான்ஹர்க் மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் ரகசிய உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சூரத்கர்க் பகுதிக்கு செல்வதாக கூறி சென்ற ஜக்தீஷை,  பின்னர் சடலமாக மர்ம நபர்கள் அவரது வீடு முன் வீசி சென்றனர். அவர் தடியடி கொண்டு தாக்கப்பட்டது தெரிந்தது. இது தொடர்பான வீடியோவும் வெளியாகிய நிலையில், அதில் கள்ளத்தொடர்பில் இருந்த பெண்ணின் கணவர் 5-6 பேருடன் சேர்ந்து தாக்குவதும், முட்டியால் ஜக்தீஷின் கழுத்தை நெரிப்பதும் தெரிந்தது. இதுகுறித்து 11 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார், 3 பேரை கைது செய்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com