தன்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்... நீதிபதியிடம் கதறிய மீரா மிதுன்...

நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளிலும் அவருக்கு ஜாமின் வழங்கி எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்திரேட் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

தன்னை தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்... நீதிபதியிடம் கதறிய மீரா மிதுன்...

நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட இரு வழக்குகளிலும் அவருக்கு ஜாமின் வழங்கி எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்ற மேஜிஸ்திரேட் பாலசுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.

பிக்பாஸ் புகழ் நடிகையான மீரா மிதுன் பட்டியலின மக்களை அவதூறாகப் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசாரால் கடந்த ஆகஸ்டு 14 ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல்  ஜோ மைக்கல் பிரவீன் என்பவரை மிரட்டிய விவகாரத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் அவ்வழக்கிலும் நடிகை மீரா மிதுன் எம்.கே.பி நகர் போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், எழும்பூரில் 2020 ஆம் ஆண்டு ஜோ மைக்கல் பிரவீன் தன்னையும் தனது குடும்பத்தாரையும் நடிகை மீரா மிதுன் மிரட்டுவதாக கொடுத்த மற்றொரு புகாரிலும், 2019 ஆம் ஆண்டு நட்சத்திர விடுதி மேலாளர் அருண் என்பவரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரிலும் எழும்பூர் போலீசார் மீரா மிதுன் மீது வழக்குப்பதிவு செய்து இவ்வழக்குகள் தொடர்பான குற்றப்பத்திரிக்கையை போலீசார் ஏற்கனவே நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் இவ்வழக்குகளில் நடிகை மீரா மிதுனை முறையாக கைது காட்டும் பொருட்டு அவரை எழும்பூர் 14வது குற்றவியல் நீதிமன்றத்தில் மேஜிஸ்திரேட் பாலசுபிரமணியம் முன்னிலையில் போலீசார் இன்று ஆஜர்படுத்தினர். வழக்கு வாதத்தின் போது நடிகை மீரா மிதுன் போலீசார் தன்னை தொடர்ந்து சித்திரவதை செய்து தற்கொலைக்கு தூண்டுவதாக குற்றஞ்சாட்டினார். மேலும், இந்த இரண்டு வழக்குகளில் கைது செய்வது குறித்து தனக்கோ தனது வழக்கறிஞருக்கோ எந்தவொரு தகவலும் காவல்துறை தெரிவிக்கவில்லை என்பதால் எனக்காக வாதிட வழக்கறிஞர் வரவில்லை என முறையிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்கானது சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மீரா மிதுனின் வழக்கறிஞர் வந்தபின் மீண்டும் வாதம் தொடங்கியது. அப்போது இவ்விரு வழக்கிலும் மீரா மிதுன் தரப்பில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இரு வழக்கிலும் மீரா மிதுனுக்கு 10 ஆயிரம் பிணைத் தொகையுடன் ஜாமின் வழங்கி மேஜிஸ்திரேட் பாலசுப்பிரமணியம் உத்தவிட்டார். இதனையடுத்து நடிகை மீரா மிதுன் மீண்டும் பட்டியலினத்தோரை அவதூறாக பேசிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.