பட்டாசு லாரி ஓட்டுனர் விபத்தில் பலி...

கடைய நல்லாரை சேர்ந்த பட்டாசு லாரி ஓட்டுநர் மேலூர் அருகே விபத்தில் சிக்கி பலியானார்.

பட்டாசு லாரி ஓட்டுனர் விபத்தில் பலி...

தென்காசி மாவட்டம் கடைய நல்லூர் தாலுகா புளியங்குடி தேவர் தெருவைச் சேர்ந்தவர் சொர்ணதேவர்மகன் திருமலைக்குமார்(42)சிவகாசியில் இருந்து சரக்கு வேன் ஒன்றில் பட்டாசு லோடு ஏற்றிக் கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்,

இன்று அதிகாலை 5 மணியளவில் மேலூர் அருகே  நான்கு வழிச்சாலையில் நாவினிப்பட்டி என்ற இடத்தின் அருகே வந்த போது எதிர் பாராத விதமாக வாகனம் சென்டர் மீடியானில் மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயமடைந்த திருமலைக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்,

மேலும் படிக்க | நீச்சல் அடிக்க சென்ற சிறுவன் காணவில்லை! பலனில்லா மணி நேர தேடல்!

கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்து சென்ற சார்பு ஆய்வாளர் ஜெயகஜேந்திரன்,தனிப்பிரிவு தினேஷ், மற்றும் நெடுஞ்சாலை துறை விபத்து மீட்பு ரோந்து வாகன பிரிவு நிர்வாகி கார்த்திகேயன் ஆகியோர் திருமலைக்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க | இருசக்கர வாகனத்தின் மீது ஜேசிபி வாகனம் மோதி விபத்து...! இருவர் பலி..!