மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை....!

 மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை....!
Published on
Updated on
1 min read

ஸ்ரீவில்லிபுத்தூர் மனவளர்ச்சி குன்றிய சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து  தீர்ப்பளித்துள்ளது.  கடந்த 2020 ஆம் ஆண்டு இருளப்பன் என்பவர் மன வளர்ச்சி குன்றிய சிறுவன் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

கடந்த மூன்று வருடமாக நடைபெற்ற இவ்வழக்கில் இருளப்பன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் 1000 அபராதம் விதித்தும் அபராதத்தை கட்ட தவறினால் மேலும் 3 மாத காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் உத்தரவிட்டார்.  அதனைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைக்கு ஈடுபடுத்தப்பட்ட இருளப்பன் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com