20க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது...

விவசாயத்திற்கு சலுகைகள் வழங்கவில்லை எனக் கூறி தேனியில் பட்ஜெட் நகல் எரிக்க முயன்ற 20க்கும் மேற்பட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கைதாகியுள்ளனர்.

20க்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் கைது...

தேனி | இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்கம் அமைப்பான தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மத்திய நிதி பட்ஜெட் நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக தேனி மாவட்டத்தில் தேனி பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் படிக்க | கல்லூரி மாணவர்கள் பேருந்தில் மோதல்... புகார் அளித்த மாணவன்!!

முன்னதாக பழைய பேருந்து நிலையம் அருகே நின்று விவசாயத்திற்கு நிதி ஒதுக்காமல், கார்ப்பரேட் நிறுவனங்களின் பயனடையும் வகையில் அவர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்கப்பட்டதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.

பின் தங்கள் கைகளில் வைத்திருந்த மத்திய நிதி பட்ஜெட்டின் நகல்களை தீயிட்டு எரிக்க முயன்றனர். அதனை அங்கிருந்த போலீசார் தடுத்து நகல்களை கைப்பற்றியதால் வாக்குவாதம் ஏற்பட்டு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து நகல் எரிக்க முயன்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சுமார் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்து போலீசார் அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக  அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க | போட்டி போட்டு ஒரே ஊரில் 2 மதுபானக்கடை!!!! அதிரடி காட்டிய எஸ்.பி......