
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கொத்தப்பேட்டை ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்பம்மா. அவருடைய மருமகள் வசுந்தரா. குடும்ப பிரச்சனை காரணமாக சுப்பம்மா, வசுந்தராவின் தலையை வெட்டி, அதனை எடுத்து வந்து காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதனால் சுப்பம்மாவை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்சினை காரணமாக வசுந்தராவின் குடும்ப உறுப்பினர்கள் வீட்டிற்கு வந்து சுப்பம்மாவை தாக்கியதாக தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரம் அடைந்த சுப்பம்மா நேற்று மாலை யாரும் இல்லாத நேரத்தில், வசுந்தராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து வசுந்தராவின் தலையை வெட்டி தனியாக எடுத்த சுப்பம்மா, அந்த தலையுடன் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.