காங்கேயத்தில் தாய், மகன் கைது: பரபரப்பு பின்னணி!
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கஞ்சா விற்பனை செய்த தாய், மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் கஞ்சா விற்பனை செய்த தாய், மகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம், கரூர் ரோட்டில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். காங்கயத்தில் இருந்து கரூர் நோக்கி சென்ற காரை போலீசார் நிறுத்த முயன்றபோது, திடீரென காரை திருப்பி கொண்டு வேகமாக சென்றனர். இதக்கண்ட போலீசார் காரை விரட்டி சென்று, மடக்கி பிடித்தனர். தொடர்ந்து காரில் இருந்தவர்கள், காங்கயம், சின்னாய்புதுார், திரு.வி.க. , நகரை சேர்ந்த ஜெயலட்சுமி, அவரது மகன் கவாஸ்கர் என்பது தெரியவந்தது.
பின்னர் காரில், இருந்த மூட்டையில், ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 18 கிலோ கஞ்சா இருந்ததை கண்டறிந்த போலீசார் அவற்றை கைப்பற்றியதோடு, 1.27 லட்சம் ரூபாய் பணம் மற்றும், காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் திண்டுக்கல்லில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, வீட்டில் பதுக்கிவைத்து, காங்கயம், வெள்ளகோவில், கரூர் பகுதியில் சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.