தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை - போலீசார் விசாரணை

மதுரை மாவட்டத்தில், கடன் தொல்லை காரணமாக தாய், மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரிமேடு பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி அளவுக்கு அதிகமான கடன் வாங்கியதாக கூறப்படும் நிலையில் அதனை திருப்பி கொடுக்க முடியாமல், மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனிடயே விஜயலட்சுமி அவரது மகனுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், இருவரின் உடலையும் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.