கள்ளக்காதலுக்கு தடையாய் இருந்த கணவன் கொலை... மனைவிக்கு ஆயுள்தண்டனை வழங்கிய நீதிமன்றம்...

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே கணவனை கொலை செய்த வழக்கில், மனைவி உட்பட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

கள்ளக்காதலுக்கு தடையாய் இருந்த கணவன் கொலை... மனைவிக்கு ஆயுள்தண்டனை வழங்கிய நீதிமன்றம்...

சேலம் மாவட்டம் சங்ககிரி புதுப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி, சுமதி தம்பதிகள் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி என்பவருடன் சுமதி என்பவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கொலை செய்ய மனைவி மற்றும் சின்னத்தம்பி ஆகியோர் சேர்ந்து சதி திட்டம் தீட்டி,கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி இரவு ரவியும் ,அவரது மனைவி சுமதியும் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இரண்டு சக்கர வாகனத்தை நிறுத்தி வாலிபர் சின்னத்தம்பி அவருடைய நண்பர் புவனேஸ்வரன், வினோத் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ரவியின் தலையில் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து புள்ளாகவுண்டம்பட்டி பகுதியில் புதைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சங்ககிரி மற்றும் தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை மூன்றாவது அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வினோத் சிறார் என்பதால்  நீதிமன்றம் விடுதலை செய்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. சதி திட்டம் தீட்டி கணவனை கொலை செய்த வழக்கில் மனைவி சுமதி, கள்ளக்காதலன் சின்னத்தம்பி, அவரது நண்பர் புவனேஸ்வரன் ஆகியோருக்கு மூன்று பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 23 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி இளங்கோ தீர்ப்பளித்தார்.