கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவர் கொலை

    கிருஷ்ணகிரி கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவர் கழுத்து அறுத்து கொலை செய்த  மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.  

கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவர் கொலை

கிருஷ்ணகிரி கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த கணவர் கழுத்து அறுத்து கொலை செய்த  மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே உனிசெட்டி கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன். இவருக்கு மனைவி ரூபா என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். அய்யப்பனின் உறவினரான மஞ்சகிரி கிராமத்தை சேர்ந்த தங்கமணி என்பவர் அடிக்கடி அய்யப்பனின் வீட்டிற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அய்யப்பனின் மனைவி ரூபாவிற்கும் தங்கமணிக்கு கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூபா தங்கமணியுடன் வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் உறவினர்கள் அவர்களை தேடிப்பிடித்து ரூபாவை அவரது கணவர் அய்யப்பனின் சேர்த்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அய்யப்பனுக்கு ரூபாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அய்யப்பன் தனது குழந்தைகளின் நலனுக்காக மனைவி ரூபாவுடன் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்து வந்துள்ளார். ஆனால் ரூபாவோ மீண்டும் கள்ள காதலனுடன் சேர்ந்து வாழவே ஆசைப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் திடீரென அய்யபன் தனது வீட்டில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனையடுத்து போலீசார் ரூபாவிடம் மேற்கொண்ட விசாரணையில், அய்யபன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். ஆனால் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் ரூபா தனது கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து கழுத்தை அறுத்து கொலை செய்தது அம்பலமானது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.