கள்ளக்காதலியை திருமணம் செய்வது யார்..? கள்ளக்காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை...

சேலம் மாவட்டம், அயோத்தியா பட்டணம் அருகே கள்ளக்காதல் தகராறில் ஏற்பட்ட மோதலில் நண்பனை கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கள்ளக்காதலியை திருமணம் செய்வது யார்..? கள்ளக்காதலர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை...

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் பகுதியை  சேர்ந்தவர் கிருபைராஜ்(23). தனியார் ஆலை ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கலைமணி(23) என்ற திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். கள்ளக்காதலி கலைமணியை சந்திக்கச் செல்லும்போது கிருபைராஜ், அவரது நண்பன் கலையரசனையும் உடன் அழைத்துச் செல்வார்.

அப்போது கலையரசனுக்கும் கலைமணிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் நண்பர்களிடையே கலைமணியை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டு இருவரும் மோதிக் கொண்டனர். இதனால் நண்பர்கள் இருவரும் பேசாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் சேலம் குமரகிரி அருகே உள்ள மலைப் பகுதிக்கு கிருபைராஜும், கலைமணியும் வந்துள்ளனர். அப்போது அங்கு வந்த கலையரசன் இருவரையும் பார்த்து கோபமடைந்து தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கிருபைராஜ்  கலைமணியை திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதால் ஒத்துழைப்பு தருமாறு  கேட்டுள்ளார். ஆனால் இதற்கு கலையரசன் மறுப்பு தெரிவித்து நான்தான் கலைமணியை திருமணம் செய்து கொள்வேன் என தெரிவித்துள்ளார். அப்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கலையரசன் தான் இரண்டு சக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வந்து கிருபைராஜை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் கிருபைராஜ் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கலைமணி அருகில் வசிக்கும் பொதுமக்களிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து பொதுமக்கள்    கிச்சிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து கிச்சிபாளையம் உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று கிருபைராஜின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து கொலை செய்த வாலிபர் கலையரசன் உடனே காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.