தோஷம் கழிப்பதாக கூறி நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமி கைது...

கள்ளக்குறிச்சியில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணிடம் தங்க நகையை பறித்துச் சென்ற மர்ம ஆசாமியை போலீசார் கைது செய்துள்ளனர்.

தோஷம் கழிப்பதாக கூறி நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமி கைது...

கள்ளக்குறிச்சி மாவட்டம்  அடுத்த வாய்க்கால் மேட்டு தெருவில் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதியன்று ராஜலட்சுமி என்பவரது வீட்டிற்கு ஆம்பூரை சேர்ந்த பாரூக் என்பவர் சென்றுள்ளார். பின்னர் ராஜலட்சுமியை பார்த்து உங்களுக்கு உடல், கை,கால் வலி உள்ளதா என என கேட்ட அந்த நபர், அப்படி இருந்தால் அதை எளிதில் குணப்படுத்திவிடலாம் என்றும் அதற்கு ஒரு சொம்பு தண்ணீரில் 11 பவுன் நகையை போட்டு பூஜை செய்யவேண்டும் என கூறியுள்ளார்.

அப்படி பூஜை செய்த தண்ணீரை ஒரு நாள் கழித்து குளித்தால் உங்களின் வலி முழுவதும் குணமாகிவிடும் என அந்த மர்ம ஆசாமி ராஜலட்சுமியிடம் கூறியுள்ளார். அதனை உண்மை என நம்பிய ராஜலெட்சுமி தனது நகையை கழற்றி கொடுத்துள்ளார். அதை வைத்து பூஜை செய்து தருகிறேன் என கூறிய மர்ம ஆசாமி பாரூக் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடி சென்றுள்ளார். இது குறித்து ஜூலை மாதம் 20 ம் தேதி கள்ளகுறிச்சி காவல்நிலையத்தில் ராஜலெட்சுமி புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் இன்றைய தினம் கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகத்தில்பேரில் வந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் நகர் பகுதியில் தோஷம் கழிப்பதாக கூறி பெண்ணை ஏமாற்றி நகை திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கிடையில் அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.