கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழப்பு!!

கிருஷ்ணகிரியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழப்பு!!
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேன்கனிகோட்டை அருகே தம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவி ஹர்பிதா, கடந்த 10ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, மாணவியின் தாய் சுமித்ரா போலீசாரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் மாணவியின் உடலை கைப்பற்றி தளி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதைத்தொடர்ந்து மாணவியின் தாய் மற்றும் பாட்டி ராதா ஆகியோர், வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தருமபுரி அருகே ரயிலில் அடிப்பட்டு இருவரும் உயிரிழந்து கிடந்தனர். தகவல் அறிந்து வந்த இரயில்வே போலீசார் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com