காலை மிதித்தது குத்தமென நேஷனல் செஸ் சாம்பியனை கண்மூடித்தனமாக வெட்டிய மர்ம கும்பல்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!!

நேஷனல் செஸ் சாம்பியன் மற்றும் மாணவன் உட்பட 3 பேரை மர்ம நபர்கள் கத்தியால் குத்தியது சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காலை மிதித்தது குத்தமென நேஷனல் செஸ் சாம்பியனை கண்மூடித்தனமாக வெட்டிய மர்ம கும்பல்.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு!!
Published on
Updated on
1 min read

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் கவியரசு(22). கோவாவில் இன்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார். விடுமுறை என்பதால் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில்,. நேற்று இரவு நேற்று நள்ளிரவு ஏகம்பரநாதர் கோயில் வெள்ளித் தேர் உற்சவத்தை பார்த்துவிட்டு தனது நண்பர்கள் நரேஷ்(22) மற்றும் 
ராகுல் (வயது 16. பள்ளி மாணவன்) ஆகியோரிடம் காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் படுத்து கிடந்த ஒருவரின் காலை மிதித்து விட்டு வருத்தம் தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் நரசிங்கராயர் தெரு வழியாக வீட்டுக்கு செல்லும்போது 15 பேர்கள் சேர்ந்த கும்பல் இவர்களை வழிமறித்து இவ்வழியே செல்ல வேண்டுமென்றால் 2000 ரூபாய் கொடுத்தாக வேண்டும் என தகராறு ஈடுபட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி மூன்று பேரையும் மர்ம நபர்கள் கத்தியால் கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர்   படுகாயமடைந்த 3 பேருக்கும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

பின்னர், மேல் சிகிச்சைக்காக நரேஷ், கவியரசு ஆகிய  இருவர் சென்னைக்கும், ராகுல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தப்பி ஓடிய ரவுடிகளை பிடிக்க மாவட்ட தனிப்படையினர் மற்றும் சிவகாஞ்சி காவல்துறையினர் தீவிரமாக தேடிவருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com