அண்ணன், தம்பியை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்... காவல் நிலையம் அருகிலேயே பரபரப்பு...

சிவகங்கை அருகே அண்ணன்- தம்பி இருவரையும் மர்ம கும்பல் ஓட ஓட வெட்டியதில், அண்ணன் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

அண்ணன், தம்பியை ஓட ஓட வெட்டிய மர்ம கும்பல்... காவல் நிலையம் அருகிலேயே பரபரப்பு...

சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷன் சாலையில் வசித்து வருபவர்கள் முத்துக்குமார் மற்றும் திவான் சகோதரர்கள். இவர்கள் இருவரும்  மதுபானம் அருந்திவிட்டு இரவு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அண்ணன், தம்பி இருவரையும், ஓட ஓட வெட்டிவிட்டு தப்பியோடியுள்ளனர்.

இதில் அண்ணன் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தம்பி திவான் மற்றும் சம்பவத்தை தடுக்க வந்த முருகன் இருவரும் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவல் நிலையம் அருகிலேயே நடந்த இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திவான் மீது கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.