சிசிடிவி கேமராவையே திருடிச் சென்ற மர்ம நபர்கள்..! கோவில்களில் கைவரிசை..!

மன்னார்குடி அருகே வெவ்வேறு இடங்களில் உள்ள இரு காளியம்மன் கோவில்களில் திருட்டு... மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு...

சிசிடிவி கேமராவையே திருடிச் சென்ற மர்ம நபர்கள்..! கோவில்களில் கைவரிசை..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோரையாறு  சாலையில்  மிகவும் பிரசித்திபெற்ற மகா காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் அச்சரகர், நேற்று மாலை வழக்கம் போல் வழிபாடுகளை முடித்துவிட்டு கோவிலை பூட்டிச்சென்றுள்ளார். 

இந்நிலையில், இன்று காலை தரிசனத்திற்கு வந்தவர்கள் கருவறை திறந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக கூத்தாநல்லூர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில், இரவு மர்ம நபர்கள் கோவில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று அம்மன் சிலையில் அணிவிக்கப்பட்டு இருந்த 1 கிலோ மதிப்பிலான வெள்ளி அலங்கார பொருட்கள், சிசிடிவி கேமிரா, ஹார்டு டிஸ்க்  உள்ளிட்டவைகளை திருடிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல் சித்தாம்பூர் கிராமத்தில் உள்ள ரெத்தின காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் ரூ 10 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். வெவ்வேறு கோவில் திருட்டு சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.