சூனியம் போக்குவதாக கூறி மோசடி...பெண்ணிடம் நகைளை ஏமாற்றிய மர்ம நபர்கள் ..!

புதுச்சேரி வில்லியனூர் அருகே சூனியம் போக்குவதாக கூறி பெண்ணிடம் மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சூனியம் போக்குவதாக கூறி மோசடி...பெண்ணிடம் நகைளை ஏமாற்றிய மர்ம நபர்கள் ..!

வில்லியனூர் அருகே கோர்க்காடு எல்லை அம்மன் நகரை சேர்ந்த லட்சுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சாமியார் போல் உடை அணிந்து வந்த 2 பேர் லட்சுமிக்கு காலில் அடிபட்டதை கூறி, உனக்கு சூனியம் வைத்துள்ளனர், வீட்டில் உள்ள தங்க நகைகளை மந்திரித்தால் எல்லாம் சரியாகி விடும் என கூறினர்.

இதை நம்பிய அப்பெண் தனது தங்க நகைகளை அவர்களிடம் கொடுத்தார். அதன் பிறகு மந்திரம் சொல்வது போல் நடித்த அவர்கள் ஒரு செம்பை கொடுத்து அதில் நகைகள் இருப்பதாகவும், நாளை அதை திறந்து நகைகளை எடுத்து கொள்ளுமாறும் கூறி சென்றனர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த அவரது மகன், இச்சம்பத்தை கேட்டு அதிர்ச்சி அடைந்து செம்பை திறந்து பார்த்தனர்.

அப்போது அதில் நகைகள் இல்லாததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள் மங்கலம் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார் அப்பகுதியில் காவி வேட்டியுடன் சுற்றிதிரிந்தோரை பிடித்து விசாரித்தனர். அப்போது கொள்ளையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள நபரை போலீசார் தேடி வருகின்றனர்.