
தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பிரைம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சேர்ந்த நாகராஜன் என்பவர் கடந்த மே 28 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை மூன்று நாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் இன்று காவல் முடிந்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது 11 ஆம் தேதி வரை நாகராஜனை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி முகமது பாரூக் உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார்.