சாமி சிலையை திருடிய வட மாநில இளைஞர்கள் கைது...

குப்பை எடுப்பது போல சாமி சிலையை வட மாநில இளைஞர் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சாமி சிலையை திருடிய வட மாநில இளைஞர்கள் கைது...
Published on
Updated on
1 min read

கிருஷ்ணகிரி | சூளகிரி, பேரிகை சாலையில் உள்ள கேகே நகரில் கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராதம்மா என்பவர் தர்மகர்த்தாவாக இருந்து கோவிலை பராமரித்து வருகிறார். வழக்கமாக ராதம்மா கடந்த 27 ஆம் தேதி காலையில் கோவிலை திறந்து சுத்தம் செய்துவிட்டு அருகில் இருந்த தங்களது வீட்டிற்க்கு சென்றுள்ளார்.

அன்று காலை தனது வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சுமார் 12 மணியளவில் கோவில் உள்ளே சென்றபோது கோவில் உள்ளே வைத்திருந்திருந்த வெண்கலத்திலான விநாயகர் சிலை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இந்நிலையில் சூளகிரி போலீசார் ராதம்மா தகவல் அளித்த நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி ஆய்வுகளை மேற்கொண்டார்.

மேலும் போலீசார் விசாரணையில் கோவிலுக்கு அருகில் இருந்த  சிசிடிவி கண்காணிப்பு கேமிரா உதவியுடன் ஆய்வு பணிகளை மேற்க்கொண்டபோது, கோவில் உள்ளே இருந்து  இரண்டு நபர்கள் பிளாஸ்டிக் பையுடன் வெளியே சென்ற காட்சி பதிவாகி இருந்தது.

சிசிடிவி கண்காணிப்பு கேமிரா உதவியுடன் குற்றப்பிரிவு  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தனபால், மற்றும் உதவி ஆய்வாளர் கணேஷ்பாபு ஆகியோர் இணைந்து திவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஓசூர் பகுதியை சேர்ந்த வடமாநில இளைஞர்கள் இருவர் அப்பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளுவது போல நோட்டமிட்டு சுமார் 20 கிலோ எடைக்கொண்ட விநாயகர் சிலையை திருடி சென்றது தெரியவந்தது.

இந்நிலையில் கோவில் உள்ளே நுழைந்து சிலையை திருடி வழக்கில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை சிறையில் தள்ளினர்.

விநாயகர் சிலையை காணவில்லை என புகார் மனு அளித்த பெண்ணிற்க்கு   சுமார் 48 மணிநேரம் போலீசார் விசாரணை நடத்தி விநாயகர் சிலையை மீட்ட தந்த சம்பவம் குறித்து போலிசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com