லாரி ஓட்டுனர் தீக்குளிக்க முயற்சி- அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு !

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே முறையான ஆவணங்கள் இருந்தும் அதிகாரிகள் பணம் கேட்டு மிரட்டுவதாக கூறி லாரி ஓட்டுனர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆரல்வாய்மொழி வழியாக இன்று காலை வந்த  லாரியை விசுவாசபுரம் அருகே வைத்து கல்குளம் தாலுகா தாசில்தார் அதடுத்து நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்துள்ளனர். அப்போது ஆவணங்கள் சரியாக இருந்தும் அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுனர் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தினர்.