ஆன்லைன் ரம்மிக்கு மீண்டும் ஒரு உயிர் பலி...!!!

ஆன்லைன் ரம்மிக்கு மீண்டும் ஒரு உயிர் பலி...!!!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் ரவிசங்கர் , இவர் அப்பகுதியுலுள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.   இவர் ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடன் தொல்லையால் மனமுடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் அளவுக்கு அதிகாமாக தூக்க  மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

தகவலறிந்து வந்த காவல்துறையினர் ரவிசங்கரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருச்சி மாவட்டத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் இதுவரை முன்று பேர் உயிரிழந்தவர்கள்  என்பது குறிப்பிடதக்கது.

இதையும் படிக்க:  அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம்....!!!